இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கை, மின்சார இயக்க மாற்றம், மாற்று எரிபொருட்களின் பயன்பாடு, பசுமை இலக்கு அணுகுமுறைக்கான நிதியுதவி மற்றும் நாட்டின் மாற்றத்திற்கான வேலைத்திட்டம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விரிவாக கலந்துரையாடினார்.