சனத் நிஷாந்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

Date:

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஒக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கில் அவர் ஆஜராகாத காரணத்தினால் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்படாமைக்கான காரணங்களை சமர்பிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கோரியுள்ளது.

கடந்த 29ம் திகதி மனு அனுப்பப்பட்டது.

பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகள் சமர்ப்பித்த முறைப்பாட்டின் பூர்வாங்க பரிசீலனைக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம்    இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,  சனத் நிஷாந்த, போராட்டக்காரர்களுக்கு நீதவான்களால் பிணை வழங்கியதை விமர்சித்ததாகவும், நீதித்துறையின் கண்ணியத்தை அவர் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும், சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

மேலும், குறித்த அறிக்கையின் மூலம் நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்த தற்போது நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...