இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல இந்த ஆண்டு இதுவரை 62,000 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.