திஹகொட பகுதியிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு விஐயம்!

Date:

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது இளைஞன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி விசாரணையை ஆரம்பித்துள்ளது.

மாத்தறை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இருந்து குழுவொன்று இன்று அந்த இடத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறுதலாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால், முச்சக்கர வண்டியில் பயணித்த 15 வயது சிறுவன் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் காயமடைந்ததைத் தொடர்ந்து குறித்த பகுதியில் மக்கள் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பிரயோகம் நடத்திய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட அதேவேளை விசாரணை முடிவியும்வரை பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...