தென்கொரிய சம்பவத்துக்கு ஜனாதிபதி இரங்கல்!

Date:

தென்கொரிய தலைநகர் சியோலில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஜனாதிபதி பிராத்திப்பதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தென் கொரிய தலைநகர் சியோலில்  கொண்டாட்ட நிகழ்வின் போது, ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 153 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில், 19 பேர் வெளிநாட்டவர் என்பதுடன், இலங்கையர் ஒருவரும் அடங்குகின்றார்.

அத்துடன் குறித்த நெரிசலில் சிக்கி மேலும் 82 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...