கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு 2, 3, 4, 5, 7, 8 மற்றும் 10 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறும் குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.