பாலியல் உணர்வை தூண்டும் மருந்துகளினால் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Date:

பாலியல் ஊக்க மருந்து பாவனையினால் ஏற்படும் உயிரிழப்புகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கு பல முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“பாலியல் உணர்வை ஊக்கப்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. தரமற்ற மருந்துகளின் பயன்பாடு, தவறான அளவு மற்றும் மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவதே இந்த உயிரிழப்புக்களுக்கு முக்கியக் காரணமாகும்.”

“20-25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 40-45 வயதிற்குட்பட்டவர்கள் இந்த நிலைமையை எதிர்நோக்குகின்றனர்.”

“பல இளைஞர்கள் இந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்துகளை பரிசோதனைக்காக அருந்தியுள்ளனர்.”

“மாதமொன்றிற்கு இரண்டு அல்லது மூன்று சம்பவங்கள் பதிவாகின்றன. இது உண்மையில் அதிக எண்ணிக்கை, எனவே நாங்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.” என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...