முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த இணைய வசதியை பயன்படுத்தி தன்னை ‘பொடி மைனா’ என அழைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இணையத்தில் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ‘நாக்கி மைனா’ என்றும் அவரை ‘பொடி மைனா’ என்றும் விமர்சிக்கின்றனர்.
மேலும் மக்கள் மஹிந்த ராஜபக்சவின் மகனாக ஏற்றுக்கொண்டதால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
2005 இல் 5வீத மக்களுக்கு மட்டுமே இணைய வசதி இருந்தது. மகிந்த ராஜபக்ச அறிமுகப்படுத்திய இணையத்தை பயன்படுத்தி இன்று மக்கள் அவரை ‘நாக்கி மைனா’ என்று அழைக்க பயன்படுத்துகின்றனர்.
மேலும் ரணில் விக்கிரமசிங்க முன்பு போல் இப்போது மேற்குலகிற்கு விசுவாசமாக இல்லை. அவர் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை.
அதேநேரம் இனி மனித உரிமைகள் பற்றி பேசவில்லை. கோட்டாபய ராஜபக்ச மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தார் ஆனால் ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஒன்று திரண்டிருந்மத காலி முகத்திடலை துடைத்தெறிந்தார் எனவும் நாமல் குற்றம்சாட்டியிருந்தார்.