பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 4 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதன்படி, தற்போது மதிய உணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர் குழுவிற்கு மேலதிகமாக மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு பூரண சத்தான உணவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் தேவையான நிதியை வழங்குவதுடன், அதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் ஒதுக்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.