‘முதல் 9 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அதிக முறைப்பாடுகள்’

Date:

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 7,500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், தமக்கு அதிகாரம் அற்ற முறைப்பாடுகள் அவற்றில் உள்ளதாக அதன் தலைவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க  தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே இவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் பற்றாக்குறைக்கு மத்தியில் பல சிரமங்களை எதிர்நோக்கும் இது தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைவர் தெரிவித்தார்.

அண்மையில் காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கையினால் சிறுவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானதாகவும் சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிராகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தமது அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உயத குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...