முளைச்சாவடைந்த நபர் ஒருவரின் உடலுறுப்புகளை பெறுவதற்காக பதுளை ஆதார வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இலங்கை விமானப்படையின் 04ம் படைப்பிரிவிற்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டது.
இலங்கை விமானப்படை மற்றும் சுகாதார அமைச்சுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் வண்டியாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
மூளைச்சாவடைந்த நபரின் முக்கிய உடலுறுப்புக்கள் தேவையான நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன் மேலும் இயதமாற்று சிகிச்சைக்காக அவரின் இருதய பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.