லாஃப் எரிவாயுவின் விலையை குறைக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதன் புதிய விலை ரூ.2,120 ஆக குறைந்துள்ளது.