அனைத்து தமிழ் கட்சிகளையும் கொழும்புக்கு வருமாறு, சம்பந்தன் திடீர் அழைப்பு!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இன்று (25) கொழும்புக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான பொதுவான கருத்துக்கு வருவதற்கு விவாதம் செய்யப்போவதாக  தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கலந்துரையாடலை இன்று பிற்பகல் சம்பந்தனின் வீட்டில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் விவாதிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், அடுத்த மாதம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

உலகில் தேடப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னர் எல் மென்சோ சுட்டு கொலை: மெக்சிகோவில் உச்சக்கட்ட பதற்றம்!

உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ, மெக்சிகோவில்...

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு

தபால் திணைக்களம் இந்த ஆண்டில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை...

ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு

இன்றைய தினம் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு...

நாட்டை விட்டு நீங்கும் குறைந்த தாழமுக்கம்: மழை நிலை குறைவடையும் வாய்ப்பு

தென்மேற்கு வங்காள விரிகுடா கடலில் காணப்படும் குறைந்த தாழமுக்க வலயம் நாட்டை...