வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்று (23) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு வாக்களிப்பு இடம்பெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று (22) 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் கிடைத்தன.