இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு பயணத் தடை!

Date:

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை வெளிநாட்டுப் பயணத்தடை கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை குறித்து இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பாக கடந்த ஒக்டோபர் மாதம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான காரணிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு பிரதம நீதவான், இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தார்.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...