இலங்கை இளைஞர் மத்தியில் அதிகரிக்கும் ‘இரசாயன பாலியல் உறவு’

Date:

கொழும்பு வாழ் இளைஞர்கள் மத்தியில் அபாயகரமான ‘இரசாயன பாலுறவு’ (Chemsex) அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் மற்றம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டி ஆரச்சி தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, எச்.ஐ.வி தொற்றாளர் அதிகரிப்பு என்பவற்றுக்கு மத்தியில் தற்போது இரசாயன பாலுறவு என்ற புது அச்சுறுத்தலுக்கு இளைஞர்கள் உள்ளாகியுள்ளனர்.

மதுபானம் மற்றும் சில போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், கெமிக்கல் செக்ஸ் என அறியப்படும் இரசாயன பாலுறவு (Chemical sex அல்லது Chemsex) தற்போது இலங்கையிலும் பிரபலமாகி, பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் அபாயத்தை உயர்த்தியுள்ளது.

பாலியல் அனுபவத்தை எளிதாக்க, நீடிக்க அல்லது தீவிரப்படுத்தமுக்கியமாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் சில ஆண்கள்,பாலியல் செயல்பாடுகளுக்கு முன்னதாக அல்லது செயற்பாடுகளின்போது சில இரசாயன போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதை இரசாயன பாலுறவு என்று வரையறுக்க முடியும்.

இதற்கு முன்னர் இவ்வாறான ஆபத்தான பாலுறவு நடைமுறையில் இருந்த போதிலும், தற்போது அது அதிகரித்துள்ளதாகவும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இந்த நிலைமை அதிகளவில் காணப்படுவதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...