ஈஸ்டர் தாக்குதல்: ரிஷாட் பதியூதீன் விடுதலை!

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்  ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (நவ.02) உத்தரவிட்டுள்ளார்.

இதனை முன்னாள் அமைச்சரின் சட்டத்தணியாள றுஸ்தி ஹபீப் உறுதிப்படுத்தினார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்வதாக நீதவான் அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மீண்டும் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்திருந்தனர்.

 

Popular

More like this
Related

காசா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காசா பகுதியில் மிகப் பெரிய நகரான காசா சிட்டியில் பஞ்ச நிலை...

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில்...

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சனிக்கிழமை...

கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு...