கஞ்சா பயிரிடும் திகதியை அமைச்சர் கூறுகிறார்!

Date:

கஞ்சா பயிரிடும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என ஆயுர்வேத இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

கஞ்சா பயிரிடுவது தொடர்பில் சில பிக்குகள் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகத் தெரிகின்றது எனத் தெரிவித்த அமைச்சர், கஞ்சா என்பது ஒரு மருந்தாகும்.  மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர்.

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக கூறி எம்பிலிப்பிட்டியவில் 10,000 ஏக்கர் கஞ்சா பயிரிடுவதற்கு எம்பிலிப்பிட்டி மகா சங்கமும் பௌத்த பிக்குகளும் அனுமதிக்க மாட்டார்கள் என இராமஞான மகா நிகாயத்தின் பிரதம சங்கநாயகம் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...