கடலில் மூழ்கும் நிலையில், படகில் இருந்து 300 பேரை சிங்கப்பூர் கடற்படையினர் மீட்டனர்!

Date:

மூழ்கிய படகில் இருந்து 300  பேரை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டனர்.

கப்பலில் இருந்த இலங்கையர் ஒருவர் நேற்று இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டு உதவி கோரினார்.

தகவல் கிடைத்ததும், கடற்படையினர் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கப்பலுக்கு உதவுமாறு தெரிவித்தனர்.

துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டபோது சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் கப்பல் கனடாவுக்குச் செல்லும் வழியில் இருந்ததாகவும் கப்பலில் இருந்தவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

கடலில் மூழ்கும் நிலையில் இருந்து படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே இலங்கை கடற்படையினருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியும்.

எனினும் ஏனையவர்கள் யார் என்ற விடயம் வியட்நாமில் தரையிறங்கிய பின்னரே கண்டறியப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீண்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க இலங்கையர்கள் சில சமயங்களில் அபாயகரமான சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டனர்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...