கடவுச்சீட்டு அலுவலகத்தில் எந்த வசதியும் இல்லை: மக்கள் குற்றச்சாட்டு

Date:

பத்தரமுல்லவில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற வரும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெற வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து சிலர் உறங்குவதுடன்,  போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் அலுவலக வளாகத்திற்கு வருபவர்கள் குறைந்த பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு வசதி இல்லை எனவும், அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள்கள் கடந்த காலங்களில் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையால், மக்கள் தங்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை தனியார் இடங்களில், பணம் கொடுத்து, ஒரு மணி நேரத்திற்கு, 50 ரூபாய் முதல், 1000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெறுவதற்கு சிலர் ஏழு முதல் எட்டு மணித்தியாலங்கள் செலவிட நேரிடுவதால் வாகனம் நிறுத்தும் கட்டணத்தில் பெருமளவு பணம் செலவழிக்கப்படுவதாகவும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டுக்கு 50 ரூபாவும் அறவிடப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...