காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் உலக தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு!

Date:

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் போது நாட்டு தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு எகிப்தின் Sharm El Shiek நகரில் நேற்று ஆரம்பமானதுடன்  18ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய அமைப்பின் இரண்டாம் ஜெனரல் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் கேசி, ருவாண்டா ஜனாதிபதி பால் கலாமா, பார்படோஸ் பிரதமர் சாண்ட்ரா மேசன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் ஷர்மா ஆகியோருடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வுகளில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...