தொற்றுக்குள்ளான நபருக்கு சிகிச்சையளிக்கும்போது, சுகாதார பணிக்குழாமினர், பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
துபாயில் இருந்து அண்மையில் நாடுதிரும்பிய ஒருவருக்கு, குரங்கு காய்ச்சல் தொற்று உறுதியானது.
20 வயதான களனி பகுதியைச் சேர்ந்த அவர், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.