சாய்ந்தமருதில் பிரதேச நல்லிணக்க குழு (DIRF) அங்குரார்ப்பணமும் பயிற்சிப் பட்டறையும்!

Date:

“சமாதானமும் சமூகப் பணியும்” எனும் (PCA) நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகளில் ஒன்றாக சாய்ந்தமருது பிரதேச நல்லிணக்க குழு (DIRF) அங்குரார்ப்பண நிகழ்வும், ஒரு நாள் பயிற்சிப் பட்டறையும் “சமாதானமும் நல்லிணக்கமும்” என்ற தொனிப்பொருளில் சாய்ந்தமருதில் நேற்று இடம்பெற்றது.

இதில் சமூகங்களுக்கிடையே எவ்வாறு சமூக ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம், சிவில் சமூகத்தின் தற்கால வகிபாகம் என்ன, எதிர்காலத்தில் சமூக ஒற்றுமைக்காக அம்பாறை மாவட்டத்தில் என்ன செயற்பாடுகளை மேற்கொள்ளலாம், மூவினங்களுக்கிடையே தொடர்ந்தும் ஒற்றுமையை தக்க வைத்துக்கொள்ள என்ன வழிமுறைகளை முன்னெடுக்கலாம் என்ற பல விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டன.

நிகழ்வில் ISD நிறுவனத்தின் பிராந்திய திட்ட ஆலோசகர் எம்.எஸ். ஜலீல் வளவாளராகக் கலந்து கொண்டார்.

முழுநாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில், 30 உறுப்பினர்கள் புதிதாக இணைந்து கொண்டனர்.

“சமாதானமும் சமூகப் பணியும்” நிறுவனமானது (PCA) நாட்டில் சமாதானம் மற்றும் சமூக ஒற்றுமையை இனங்களுக்கு இடையில் ஏற்படுத்துவதற்காக செயற்பட்டு வரும் ஒரு சமூக நிறுவனமாகும்.

இப்பயிற்சிப் பட்டறையில் சமாதானமும் சமூக நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தேசமான்ய ரீ. ராஜேந்திரன், திட்ட உத்தியோகத்தர் எம்.எல்.ஏ. மாஜித், மாவட்ட நல்லிணக்க குழு இணைப்பாளர் எஸ்.எல்.அஸீஸ், சாய்ந்தமருது பிரதேச சமாதான சமூகப்பணி நல்லிணக்க குழு இணைப்பாளர் அகமட்லெப்பை ஆதம்பாவா, மாவட்ட செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல்.ஏ. இர்பான் மற்றும் பிரதேச நல்லிணக்க குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...