ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களின் கவனம் இலங்கையின் பொருளாதார நிலைமையை மீட்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா மற்றும் ஜப்பான் உட்பட பல கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கைக்கு அவசரமாக நிதிப் பாதுகாப்பு தேவை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டியுள்ளதால் இந்த பாதுகாப்பு அவசரமாக தேவைப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் நடுத்தர வருமான நாடுகள் எதிர்நோக்கும் கடனை மீளச் செலுத்துவதில் உள்ள பிரச்சினை குறித்து நேற்று (15) கவனம் செலுத்தியுள்ளனர்.
இதன்படி, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் கடன் மறுசீரமைப்பு கோரிக்கைகளுக்கு பல கடன் வழங்கும் நாடுகள் நல்ல பதிலை வழங்க வேண்டும் என ஜி-20 நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் முக்கிய பொருளாதாரம் என்று கூறும் நாடுகளின் தலைவர்கள் தலைமையில் ஜி 20 மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் இந்த ஆண்டு நடைபெறுகின்றது.