தனுஷ்கவுக்கு ஊரடங்கு உத்தரவு!

Date:

அவுஸ்திரேலிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவரது பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக் கோரி சிட்னி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  மனுவை பரிசீலித்ததை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.

சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் அண்மையில் மறுத்திருந்தது.

11 நாட்கள் சிறையில்  இருந்த அவருக்கு டவுனிங் சென்டர் லோக்கல் கோர்ட்டில் நடந்த விசாரணைக்குப் பிறகு இன்று (நவம்பர் 17) அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

தினமும் ஈஸ்ட்வுட் பொலிஸில் ஆஜராகவும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவும், கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் அவர் பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல் (  Tinder) டிண்டர் அல்லது வேறு எந்த டேட்டிங் பயன்பாட்டையும் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை, மேலும் சட்டப் பிரதிநிதி முன்னிலையில் மட்டுமே சமூக ஊடகத்தை அணுக முடியும்.

மேலும், புகார் தாரரை தொடர்பு கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அவர் 200,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக (31) அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...