தரம் 5 மாணவர்களை தாக்கி மின்சார அதிர்ச்சி கொடுத்த பொலிஸ் அதிகாரிகள்: சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு

Date:

ஹொரணை, றைகம பிரதேசத்தில் உள்ள பாடசாலையில்  தரம் 5 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை , பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, பொல்லுகளால் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது.

ஹொரண  பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வருடத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை அதிபரின் அனுமதியுடன் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மாணவர்களை மண்டியிட்டு, உள்ளங்காலில் தாக்கி, மின்சாரத்தால் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, அதிபர், ஆசிரியர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை நாளை நிறுவனத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர்  உதயகுமார அமரசிங்கவிடம் வினவிய போது, ​​சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, நேற்று (6) மாணவர்களைப் பரிசோதித்த சட்ட மருத்துவ அதிகாரி அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் உதய அமரசிங்கவுக்கு தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான உண்மைகளை நாளை (8) நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...