துருக்கியில் தற்கொலை படை தாக்குதலில் 6 பேர் பலி

Date:

துருக்கி நாட்டின் தலைநகரம் இஸ்தான்புல்லில் ஷாப்பிங்  இடங்களில் ஒன்றான இஸ்திக்லால் அவென்யூவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 53பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி மற்றும் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

நகரின் தஸ்கிம் சதுக்கத்திற்கு அருகில் உள்ள இஸ்திக்லால் அவென்யூவில் உள்ள சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வெடிப்புக்கான காரணம் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், துருக்கிய ஊடகங்கள் இது தற்கொலைக் குண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறுகின்றன. இது நகரின் பரபரப்பான ஷாப்பிங் தெருக்களில் ஒன்றாகும் மற்றும் பல முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அருகில் உள்ளதால், சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.

இதேவேளை ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா புறப்படுவதற்கு முன் செய்தியாளர் கூட்டத்தில் துருக்கி ஜனாதிபதி  ரெசெப் தயிப் எர்டோகன்,

“இந்த கொடூரமான தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளைக் கண்டறிய எங்கள் மாநிலத்தின் தொடர்புடைய பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

“வெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண்ணின் பங்கு இருப்பதாக தெரியவருகிறது,” என்று அவர் கூறினார்.

மேலும் துருக்கி நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை முன்னெடுத்தவர்கள் தோல்வியடைவார்கள் என்றும் துருக்கி ஜனாதிபதி சபதம் செய்தார்.

 

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...