நடை பயணத்திற்கு இடையூறு: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

Date:

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 12 ஆம் திகதி களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடையூறு விளைவித்தமை,  இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில், சட்டவாட்சியை பாதுகாக்கும் வகையிலும் அமைதியை பேணும் நோக்கிலும் பொலிஸாரின் ஒழுக்கத்தை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நடை பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்கான காரணம், யாருடைய உத்தரவின் பேரில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது, யாரால்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது பொலிஸாரால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல்களின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சத்தியக் கடதாசி மூலம் தகவல்களை சமர்ப்பிக்குமாறும் குறித்த கடிதத்தில் பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா: போருதோட்டையில் ஆரம்பம்

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள்...

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார்...