நாட்டில் இன்று முதல் அமுலாகும் மரண தண்டனை!

Date:

ஐஸ் போதைப்பொருள் வைத்திருப்பவர்கள் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு  மரண தண்டனை விதிக்கும் நடைமுறை இன்று  முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த அக்டோபர் 19ஆம் திகதி இது தொடர்பிலான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (23) சட்டமூலத்தின் சான்றிதழில் கையொப்பமிட்டதை அடுத்து, மேற்கூறிய சட்டம் அமுலுக்கு வந்தன.

அபின் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டம், முன்னர் குறிப்பிடப்பட்ட சட்டமூலத்தின் மூலம் திருத்தப்பட்டது, இது செப்டம்பர் 9 அன்று நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மருந்துப் பொருட்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் மற்றும் இறக்குமதி செய்வதற்கும் ஏற்கனவே உள்ள தேவைகளின்படி, இந்தச் சட்டத்தின் மாற்றம் தற்போதுள்ள சட்டத்தை மேம்படுத்தி வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, ஐந்து கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்து குற்றவாளி என நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...