பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்தார்.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறுகையில்,
மகளிர், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு இணைந்து இந்த சட்டமூலத்திற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..