புத்தளத்தில் விபத்தொன்றில் உயிரிழந்த பிச்சைக்காரனிடம் ரூ.135,000 பணம்!

Date:

புத்தளம் – சிலாபம் வீதியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிச்சைக்காரனொருவரிடம் 135,000 ரூபா பணம் இருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்குகளின் கடவுப் புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – சிலாபம் வீதியில் அனவிலுந்தவ பகுதியில் சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளில் மோதியதில் உடப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அனவிலுந்தாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவரது பையை சோதனை செய்ததில் ரூ.135,000  பணம் மற்றும் ரூ.47,000 மதிப்புள்ள அவரது கணக்குகளின் வங்கி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையில் அவர் பல வருடங்களாக பிச்சைக்காரராக வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.கிர்த்திபால மேற்கொண்டு வருகிறார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...