புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ‘விஷேட ஒன்று கூடல்’!

Date:

புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ‘விஷேட ஒன்று கூடல்’ நிகழ்வொன்று (26) புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள அதன் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு புத்தளம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கருத்திட்ட அதிகாரி ஆர்.சுகுனா மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதமோதரன் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு தரப்பினர், கல்வியலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பல்வேறு அமைப்புக்களை சார்ந்த சமூகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கலில் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் காலை போஷாக்கின்மையினை போக்குவதற்கு விழுது மேம்பாட்டு மையம் முன்வரவேண்டும் என இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

எதிர்வரும் ஜனவரி மாதம் புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரசாங்க அதிகாரிகள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வுகளை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்: எம்.யூ.எம்.சனூன்

Popular

More like this
Related

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...