பேருவளையில் வசிக்கும் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!

Date:

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் மற்றும் வெளி நடவடிக்கை சதிகாரரின் வர்த்தக பங்குதாரராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவர் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் அஹ்மத்லுக்மான் தாலிப் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தொழிலதிபரான முசாப் துர்க்மென் ஆகியோருடன் இணைந்து மொஹமட் நிசார், வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் அல்லது நிசார்  இலங்கையை தளமாகக் கொண்ட தாலிபின் வர்த்தக பங்காளி என அமெரிக்க திறைசேரி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தாலிப் மற்றும் நிசார் இருவரும் ஒரே வணிகத்தின் கூட்டு பங்காளிகளாக இருந்தனர். அத்துடன் நிசார் 2018இன் பிற்பகுதியிலிருந்து இலங்கையில் தாலிபின் வணிகப் பங்காளியாக செயற்பட்டு வந்துள்ளார்.

இலங்கையில் அவர்களின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் வருடத்திற்கு கிட்டத்தட்ட 200,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி குறிப்பிட்டுள்ளது.

பிரேசில், கொலம்பியா, இலங்கை, தன்சானியா, துருக்கி மற்றும் வளைகுடா உட்பட உலகம் முழுவதும் தாலிப் வர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...