மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிமை மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அறிவித்தார்
கடந்த வார இறுதியில் நடந்த தேர்தலில் அன்வரின் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அதிக இடங்களைப் பெற்றது.
ஆனால், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 112 இடங்களைப் பெற்ற நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் அல்லது எந்த கூட்டணியும் உருவாகவில்லை.
‘எனவே, மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிமை மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நியமனம் செய்து அறிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் மற்றும் போட்டியாளர்களான மலாய்-முஸ்லிம் பெரிகடன் நேஷனல் (PN) கூட்டணி, முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் தலைமையில் 2வது அதிக இடங்களை பெற்றுள்ளது.
இருவரும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பாரிசான் நேசனல் , கடந்த 2018 தேர்தலில் வரலாற்று தோல்விக்கு முன் சுமார் 60 ஆண்டுகளாக மலேசியாவில் ஆதிக்கம் செலுத்திய கூட்டணி.
எந்த முன்னேற்றமும் செய்ய முடியாத நிலையில், மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, அன்வர் மற்றும் முகைதின் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, புதிய அரசாங்கத்தை யார் வழிநடத்துவது என்பது குறித்த அவர்களின் கருத்துக்களை கேன்வாஸ் செய்தார்.
இதன்பின் இன்று அரச குடும்பங்களின் கூட்டத்திற்குப் பிறகு, அன்வார் பிரதமராக இருப்பார் என்று மன்னர் சுல்தான் அப்துல்லா அறிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.