மேல் மாகாணத்தில் 25 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

இன்று உலக சர்க்கரை நோய் தினம். ‘விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தைக் காப்போம்’ என்பதே இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருளாகும்.

இந்நிலையில் உலகளவில் நீரிழிவு நோயாளிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் நீரிழிவு  தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் மணில்க சுமனதிலக்க உரையாற்றினார்.

இந்நாட்டில் முதியோர்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் மேல் மாகாணத்தில் வயது முதிர்ந்தவர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்க உணவுமுறை மிகவும் முக்கியமானது என வைத்தியர் மணில்க சுமணதிலக்க மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை  இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஜானக , இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மருந்தை விட உணவின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...