ரஷ்ய தாக்குதல்களினால் உக்ரைனில் மின்தடை!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மின்சார தடை காரணமாக மூன்று அணு உலைகளும் செயலிழந்துள்ளதாக  ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா இந்த தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதுடன், இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ தொழில்நுட்பம் மூலம் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, நாடு முழுவதும் உள்ள எரிசக்தி மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....