வைரஸ் நோய்கள் அதிகரித்து வருகின்றன: சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

Date:

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்களை மீண்டும் பின்பற்றினால் இந்த வைரஸ் நிலைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் நோயுடன் ஒப்பிடுகையில் இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன், இந்த நோய் ஒருவருக்கு மற்றொருவருக்கு பரவும் அபாயமும் உள்ளது.

எனவே, முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியமானது என வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...