ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்!

Date:

கொழும்பு மருதானை சந்தியை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்தும் எதிர்ப்பு பேரணி மருதானை எலிபின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் ஆரம்பமாகியது.

‘அடக்குமுறைக்கு எதிராக, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக, உரிமைகளுக்காகப் போராடுவோம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், உட்பட பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...