இன்று செந்நிலாவாகும் வெண்ணிலா!

Date:

இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் இன்று (08) நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளுக்கு இது முழு சந்திர கிரகணமாகத் தோன்றினாலும், இலங்கைக்கு இது அரைச் சந்திர கிரகணமாகவே காணப்படுகிறது.

மீண்டும் அடுத்த முழு சந்திர கிரகணத்தை  2025 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதியன்று உலக மக்கள்  காணமுடியும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை மாலை 5.48 க்கு கிழக்கு அடிவானத்தில் இருந்து சந்திரன் உதயமாகும் நிலையில், அதன் கடைசி பகுதியை மட்டுமே பகுதி சந்திர கிரகணமாக இலங்கை மக்கள் காணக்கூடியதாக இருக்கும். இந்த கிரகணம் மாலை 6.19 க்கு முடிவடையும்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...