இன்று முதல் ஃபைசர் தடுப்பூசி பெறமுடியாது!

Date:

ஃபைசர் தடுப்பூசியை இன்று முதல் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6 லட்சம் பைசர் தடுப்பூசிகள் நேற்றைய தினத்துடன் காலவதியானமையே இதற்கான காரணம் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 பரவக்கூடிய அதிக அவதானமிக்க 60வயதுக்கு மேற்பட்ட 27 லட்சம் பேர் உள்ளனர். எனினும், இரண்டு லட்சம் பேரே பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், காலாவதியான பைசர் தடுப்பூசிகளை விரைவில் அழிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் கொவிட்-19 தொற்று உறுதியான 17 பேர் அடையாளங் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 70 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 காரணமாக நேற்று முன்தினம் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...