லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய விலை இன்று (நவ.6) இரவு முதல் அமுலுக்கு வருகிறது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 200-250 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று (நவ.6) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெரிவிக்கவுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எரிவாயு விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.