இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மருதானையிலிருந்து ஆரம்பமாகவுள்ள அமைதிப் பேரணியில் 12 முன்னணி அரசியல் கட்சிகள், 20 முன்னணி தொழிற்சங்கங்கள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்து அரச அடக்குமுறைக்கு எதிராக ஈடுபடவுள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டாலின் உட்பட காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த எதிர்ப்பு ஊர்வலம் கடந்த சில நாட்களாக அனைத்து உயர் அரசியல் கட்சிகள் மற்றும் முன்னணி தொழிற்சங்கங்களின் ஆதரவைத் திரட்டியது.
அதற்கமைய கூறப்பட்ட அரசு அடக்குமுறையின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பரந்த இயக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைப்பாளர்கள் இந்த பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களுடன் கூட்டணி அமைத்த அனைத்து கட்சிகளும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முன்னிலை சோசலிஸ்ட் கட்சி ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, 43 வது படையணி, ஐக்கிய சோசலிசக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அனுர பிரியதர்ஷன, சந்திம வீரக்கொடி மற்றும் குழுவினர் இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம், இலங்கை வங்கி தொழிற்சங்கம், இளம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், உட்பட 150 க்கும் மேற்பட்ட சுயாதீன சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணையவுள்ளது.
இதேவேளை இன்றைய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறை தயார் நிலையில் உள்ளது.