இன்றைய வானிலை அறிவிப்பு!

Date:

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை : காலியில் இருந்து மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு திசையில் இருந்து அல்லது தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை : மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

Popular

More like this
Related

சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (20) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...