இலங்கையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நோயாளி துபாயில் இருந்து வந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோயாளி தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் இவர் எனவும், குறித்த நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது தேடப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.