இஸ்ரேல் பொதுத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Date:

இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது.

நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி இஸ்ரேலில் நேற்று பொதுத் தேர்தல் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளில் நடந்த 5ஆவது பொதுத்தேர்தல் இதுவாகும்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை தொடர்ந்தது.

ஆயிரக்கணக்கான வாக்குச் சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடைமையை ஆற்றினர்.

வாக்குப்பதிவு முடிவடைந்தததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. அதற்கமைய தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேத்தன் யாகு மீண்டும் பிரதமராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இதேவேளை பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 31 இடங்களைப் பெறும் என்று இன்றைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...