பத்தரமுல்லவில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற வரும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெற வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து சிலர் உறங்குவதுடன், போதிய வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் அலுவலக வளாகத்திற்கு வருபவர்கள் குறைந்த பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு வசதி இல்லை எனவும், அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள்கள் கடந்த காலங்களில் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையால், மக்கள் தங்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை தனியார் இடங்களில், பணம் கொடுத்து, ஒரு மணி நேரத்திற்கு, 50 ரூபாய் முதல், 1000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இதேவேளை ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெறுவதற்கு சிலர் ஏழு முதல் எட்டு மணித்தியாலங்கள் செலவிட நேரிடுவதால் வாகனம் நிறுத்தும் கட்டணத்தில் பெருமளவு பணம் செலவழிக்கப்படுவதாகவும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டுக்கு 50 ரூபாவும் அறவிடப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.