கந்தக்காடு சம்பவம்: அறிக்கை கோரும் ஜனாதிபதி!

Date:

(file Photo)

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச் சென்றிருந்தனர்.

எனினும் பின்னர், 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...