பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (11) கொழும்பு, அளுத்கடை நீதவான் வழங்கிய உத்தரவுக்கு அமைய தீர்ப்பளிக்கப்பட்டது.
ராஜகிரிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவமொன்றில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கிலிருந்து கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் சாட்சியமளிக்காத காரணத்தினால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.