‘கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் சிந்தனைகள்’ நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மருதமுனை கலாசார நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இஸ்லாமிய சிந்தனை முத்திங்கள் ஆய்வுச் சஞ்சிகையில் சுமார் 40 வருட காலமாக மர்ஹும் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களால் எழுதப்பட்ட சிந்தனைகளின் தொகுப்பான இந்த நூல் அறிமுக நிகழ்வு அம்பாரை மாவட்டம் றாபிததுந் நளீமியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.