எதிர்கட்சி உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கறுவாத்தோட்டம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
அவரும் அவரது ஆதரவாளர்கள் குழுவும் பெண்களுக்கு எதிரான காவல்துறை வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து பேரணியாக சென்றனர்.
கொழும்பில் பொலிஸாரை போன்று உடையணிந்து வீதிநாடகம் மேற்கொண்ட இருவரை கறுவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஹிணிக்கா உள்ளிட்ட குறித்த பெண்கள் குழுவினர் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தம்மையும் கைது செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வீதிநாடகத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமர்ந்து அதில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் அமைதி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.